உதயமானது முத்துப்பேட்டை தனி தாலுகா!

மக்களின் நீண்டக்கால கோரிக்கையை ஆன முத்துப்பேட்டை தனி தாலுகா உதயமானது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி, அடுத்த முத்துப்பேட்டை மக்களின் நீண்ட கால…

மக்களின் நீண்டக்கால கோரிக்கையை ஆன முத்துப்பேட்டை தனி தாலுகா உதயமானது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி, அடுத்த முத்துப்பேட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று முத்துப்பேட்டையை  தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா செயல்படும் என்று 2011 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து எந்தெந்த கிராமங்களை இணைக்க வேண்டும் என்ற பட்டியலும் தாயார் செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முத்துப்பேட்டை தனி தாலுக்கா அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பேட்டை தனி வட்டமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து  தாலுகா பணிகள் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் காணொலி வாயிலாக வட்டாசியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ குத்து விளக்கேற்றி விழாவை துவங்கி வைத்தார். இந் நிகழ்வில் வருவாய் அலுவலர், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மற்றும் ஏராளமான வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

—கோ  சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.