இசையமைப்பாளர் தேவா காலமானார்!

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவா இன்று சென்னையில் காலமானார்.

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989 ஆம் ஆண்டு தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘தேனிசைத் தென்றல்’ என்று அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவ்வை சண்முகி காதல் கோட்டை மகா பிரபு எட்டுப்பட்டி ராசா உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.