ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இரண்டு கட்டமாக பெங்களூருவில் நடந்துவருகிறது. நேற்று 12/02/2022 முதற்கட்ட ஐபிஎல் ஏலம் நடைபெற்றது.…

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இரண்டு கட்டமாக பெங்களூருவில் நடந்துவருகிறது. நேற்று 12/02/2022 முதற்கட்ட ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு வீரர்கள் இதுவரை விளையாடிய அணிகள் அல்லாது மாற்று அணிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த நிலையில் இரண்டாம் கட்ட ஏலம் இன்று நடந்துவருகிறது.

இந்த ஏலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணி என இரண்டு அணிகளுமே போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தது. ஒரு கட்டத்தில் முன்னதாக 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜோப்ரா இந்த ஆண்டு 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் 5 முறை ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்ற மும்பை அணி தனது 6வது வெற்றியை நோக்கி திட்டமிட்டு வீரர்களை ஏலம் எடுத்துவருகிறது. தற்போது மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து 10 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்குபெறாமல் இருந்துவரும் இவருக்கு, இன்றைய ஏலத்தில் கடும் போட்டி ஏற்பட்டது.

தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இவருக்கு இன்றைய ஏலம் அதிர்ச்சி அளித்த விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு கண்களை விழித்தவாறு ஒரு பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.