முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வெள்ள சேதத்தை பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்கள் போட்டோ எடுத்துக் கொள்வது அரசியலில் ஏற்புடையதுதான் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கல்லல் அருகே பாகனேரியில் தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளதால் பயிர்க் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வெள்ள பாதிப்பு அச்சத்தில் இருக்கும் மக்களின் அச்சத்தை போக்க அரசு துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்டா மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்தது அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல செய்தி என்றும் குறிப்பிட்டார். வெள்ள சேதத்தை பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்கள் போட்டோ எடுத்துக் கொள்வது அரசியலில் ஏற்புடையதுதான் எனவும் கூறினார்.

சென்னை மாநகராட்சி குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்வி நியாயமானது. மக்களுக்கு வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்பு ஏற்படும் பொழுது, அரசும், மாநகராட்சிகளும் தங்களுடைய கடமையை சரிவர செய்ய வேண்டும் என்ற வாசன், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கி தங்களது உரிமையை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

தமிழ்நாட்டில் ஆள் மாற்றம்தான் நிகழ்ந்துள்ளது; ஆட்சி மாற்றம் நிகழவில்லை – சீமான்

Saravana Kumar

மாதவிடாய் குறித்து மனம் திறந்துபேசுங்கள்: தமிழிசை சௌந்தரராஜன்!