முல்லைப்பெரியாறு அணை வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரி காங்கிரஸ் எம்பி டீன் குரியாக்கோஸ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக வைத்திருக்க உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க கோரி இடுக்கி காங்கிரஸ் எம்பி டீன் குரியாக்கோஸ் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கும், பயிர்களுக்கும் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி காப்பீடு மறுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைச் செய்தி: ஊட்டியில் வலம் வரும் மினி கார்
முல்லைப்பெரியாறு அணையின் கீழ் பாசன பகுதியில் வசிக்கும் ஒரு குடிமகன் என்ற காரணத்தினாலும், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் டீன் குரியாக்கோஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









