டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 7 உறுப்பினர்களை கொண்ட கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. இதன்படி, திமுக அலுவலகத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது திமுக அலுவலகமாக அண்ணா அறிவாலயம் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை திறப்பதற்காக அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: முல்லைப்பெரியாறு வழக்கு – இடுக்கி காங்கிரஸ் எம்பி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
முதலமைச்சராக பொறுப்பேற்றபின், தற்போது 3-வது முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் வகையில் முதலமைச்சரின் பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக அண்ணா அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








