குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியாயவிலைக்கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. அதேபோல, நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் தரக்குறைபாடு இருந்தால் நியாயவிலைக்கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களின் அதிகாரிகளே அதற்கு முழு பொறுப்பு எனவும், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொதுவிநியோக திட்டத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், கூட்டுறவு சார்பதிவாளர் குறைந்தது ஒரு மாதத்திற்கு 25% ஆணைகளை சரிபார்க்க வேண்டும் எனவும், நல்ல தரமான பொருட்கள் பெறுவது உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: முல்லைப் பெரியாறு – உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு தாக்கல்
மேலும், நியாயவிலைக் கடைகளை சரியான நேரத்தில் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், நியாயவிலை கடைகளில் அங்கீகரிக்கப்படாத வெளிநபர் இருப்பதை அனுமதிக்க கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








