பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்-ன் பிறந்தநாளைக் கொண்டாடிய சிஎஸ்கே!

சிஎஸ்கேவின் பயிற்சியாளரும் முன்னால் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான ஸ்டீபன் ஃப்ளெமிங் தனது 48வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டி வரும் 9-ம்…

சிஎஸ்கேவின் பயிற்சியாளரும் முன்னால் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான ஸ்டீபன் ஃப்ளெமிங் தனது 48வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டி வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். இந்த போட்டியின் முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. கடந்த முறை அரையிறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் தோனி தலைமையிலான சென்னை அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், சிஎஸ்கேவின் பயிற்சியாளரும் முன்னால் நியூசிலாந்து அணியின் கேப்டனுமான ஸ்டீபன் ஃப்ளெமிங் தனது 48வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோனி மற்றும் சக வீரர்கள் கலந்துகொண்டனர். நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோவை அந்த அணி அவர்களின் சமூக வலைதல பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

மேலும் இந்த வீடியோவுடன் “எங்களின் உறவானது மைதானத்துடன் நின்றுவிடாது”என பதிவிட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் ஸ்டீபன் ஃப்ளெமிங் பிறந்தநாள் கேக் வெட்டியதும் சிஎஸ்கே வீரர்கள் அவருக்கு வாழ்த்து கூறியதும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோ பதிவில் அனைவரும் ஸ்டீபன் ஃப்ளெமிங் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.