இயல்பை விட அதிக மழை; தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை

நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக 122% என்ற அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட…

நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக 122% என்ற அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலமான நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். இந்நிலையில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், இயல்பாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் மாதம் 178 மிமீ என்ற அளவில் மழை பெய்யும். இது இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் திருச்சிராப்பள்ளி அரியலூர் ராமநாதபுரம் திண்டுக்கல் கரூர் திருநெல்வேலி தென்காசி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

02.11.2021,03.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.” என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.