மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை இந்த திட்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பலன்பெறத் தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிக் கல்லூரிகள் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தகுதியான மாணவியரின் பள்ளி TC, 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். ஓடிபி எண் ஆகியவை கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








