முக்கியச் செய்திகள் தமிழகம்

குரங்கம்மை நோய் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப்பிரிவில் 32 படுக்கைகள் அமைத்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்து அலுவலர்களிடம் ஆலோசனை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது, இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்ச் 17-ம் தேதிக்கு பிறகு கொரோனா இறப்பு இல்லை. பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம், தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய்எதிர்ப்பு அதிகரித்து உள்ளது, இருந்தாலும் கவனக் குறைவுடன் இருக்க வேண்டாம் என எச்சரித்தார். மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம், அதேநேரம் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றார். 1. 21கோடி மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என கூறினார். 43.45 லட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 13 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும். வயதானவர்கள் மற்றும் கூட்டு நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் உடலில் நோய் தொற்று இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் இந்நோய் பதிவாகவில்லை என தெரிவித்த அவர் இந்நோய் குறித்த கண்காணிப்பு தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

தமிழ்நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தபட உள்ளது என்றார். மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் வராமல் இருந்தால் நோயாளிகளே புகார் செய்யலாம், அதேநேரம் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

 

மக்களை தேடி மருத்துவ முகாமில் செவிலியர்கள் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது, அதேநேரம் 2400 செவிலியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், கொரோனாவில் பணியாற்றியவர்கள் எம்ஆர்பி மூலம் வரக்கூடிய செவிலியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். வையின் அடிப்படையில் வருங்காலத்தில் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப எம்ஆர்பி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

G SaravanaKumar

அரசியலமைப்பு சட்டத்தை விட மனுதர்மம் தான் கோலோச்சுகிறது – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

EZHILARASAN D

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Web Editor