முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை – வங்கியின் கூல் அப்டேட்

சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய அளவில் நேரடி பணப் பரிவர்த்தனை படிப்படியாக குறைந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், செயலிகள் போன்றவற்றில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கீ செயின் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான அறிமுக விழா போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, வாலட் போன்று செயல்படும் விதமாக இந்த ஸ்மார்ட் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில், தற்போதைக்கு 5 ஆயிரம் வரை லிமிட் வழங்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் விரும்பினால் அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் காமகோடி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாட்ச் உடல் நலனையும் கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண பரிவர்த்தனைகள் மேலும் சுலபமாக்கும் வகையில் சிட்டி யூனியன் வங்கி இந்த அப்டேட்டை அறிமுகப்படுத்தியிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

பணம் காய்க்கும் பனைமரம்

Halley Karthik

பொறியியல் கலந்தாய்வு – ரேண்டம் எண்கள் வெளியீடு

Saravana Kumar

ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

Saravana Kumar