உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலான ஸ்மார்ட் வாட்சுகளை தயாரிக்கும் FitBit நிறுவனத்தை வாங்கும் நடைமுறைகள் அனைத்தும் முடிவைந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.,
உலகில் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலான ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து பிரபலமடைந்த நிறுவனம் FitBit. இந்த ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்சில் ஃபிட்நஸ் ட்ராக்கர் தொழில்நுட்பம் உள்ளதால் இதை கையில் கட்டிக்கொண்டால், உடலில் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு உள்ளிட்டவற்றை ஆராய முடியும். மேலும் இந்த வாட்ச்கள் மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் குறையும் கலோரிகளையும் தெரிந்துகொள்ள முடியும். FitBit ஐ தொடர்ந்து தற்போது சாம்சங், ரெட்மி உள்ளிட்ட பலநிறுவனங்கள் இதுபோன்ற வாட்ச்களை தயாரிக்க தொடங்கிவிட்டன. இருப்பினும் FitBit நிறுவன வாட்ச்களுக்கு தனி சிறப்பு உண்டு.
அத்தகையை FitBit நிறுவனத்தை வாங்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தை சுமார் 15 கோடி ரூபாய்க்கு கூகுள் நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் FitBit ஐ கையகப்படுத்துவதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் FitBit ஐ கையகப்படுத்தும் நடைமுறைகள் முடிவடைந்ததாகவும் FitBit நிறுவனம் வழங்கியதை போலவே வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்குவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் விளம்பர நோக்கங்களுக்காக FitBit பயனர்களின் உடற்பயிற்சி மற்றும் சுகாதாரத் தரவு பயன்படுத்தப்படாது என்றும் கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது,







