தாயாகவிருக்கும் நடிகை இலியானா கருவில் இருக்கும் தனது குழந்தை வயிற்றில் நடனமாடி தன்னை தூங்க விடாமல் செய்யவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
நடிகை இலியானா டி குரூஸ் தெலுங்கு மொழித் திரைப்படமான தேவதாசு மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அவர் தமிழ் சினிமாவில் கேடி (2006) படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணாவுடன் நடித்து அறிமுகமானார். பின் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் நடிகர் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்தார், இது வணிக ரீதியாக வெற்றியையும் தமிழ் ரசிகர் பட்டாளத்தின் வரவேற்பையும் பெற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகை இலியானா 2012 இல் ரண்பீர் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ராவின் ‘பர்ஃபி’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த நிலையில் நடிகை இலியானா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார். இதற்கிடையில், குழந்தையின் தந்தை யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இருப்பினும், இலியானா தனது உறவு குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறினார்.
தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கும் இந்த நிலையில் தனது கர்ப்ப காலத்தின் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து வருகிறார். தற்போது தனது வயிற்றில் உள்ள குழந்தை எப்படி தூங்க விடாமல் செய்யும் என்பதை அவர் காட்டினார்.
இலியானா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தூங்கச் செல்வதற்கு முன் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துகொண்டு, “நீங்கள் சிறிது தூங்க நினைத்த போது, உங்கள் குழந்தை உங்கள் வயிற்றில் நடனமாட முடிவு செய்தால்” என்று எழுதினார். பின் விழித்த பிறகு, அவர் தனது புதிய செல்ஃபியைப் பகிர்ந்துகொண்டு, “நாங்கள் கொஞ்சம் தூங்கினோம்” என்று பதிவிட்டார்.
புதன்கிழமை இரவில், தனது வீட்டில் எப்படி மென்மையான ரொட்டி செய்தேன் என்று மாவின் படங்களையும் அதன் பிறகு ரொட்டியையும் பகிர்ந்துகொண்டு, அவர் எழுதினார், “நேற்று பிரபலமான ஷோகுபான் அல்லது ஜப்பானிய மென்மையான சாண்ட்விச் ரொட்டியை சுட முடிவு செய்தேன்”. அதற்கு மென்மையான ரொட்டி என்றும் பெயரிட்டுள்ளார்.
அவர் சமீபத்தில் படுக்கையில் ஒரு கோப்பை பானத்துடன் ஓய்வெடுக்கும் போது முதல் முறையாக தனது குழந்தை உதைத்த ஒரு வீடியோவை “சமீபத்தில் வாழ்க்கை” என்று பதிவிட்டார். கர்ப்ப காலத்தில் தனது ஆசைகளை தான் எவ்வாறு பூர்த்தி செய்கிறேன் என்பதையும் அவரது சகோதரியால் செய்யப்பட்ட பிளாக் பாரஸ்ட் கேக்கின் இரண்டு படங்களை “சகோதரி சிறந்த பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை உருவாக்குகிறார்” என பகிர்ந்துகொண்டார்.
இலியானா சமீபத்தில் பாட்ஷாவுடன் ஒரு மியூசிக் வீடியோவில் நடித்தார். அவர் கடைசியாக அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்த தி பிக் புல் படத்தில் நடித்தார். அவர் அடுத்ததாக ரன்தீப் ஹூடாவுடன் அன்பேர் அண்ட் லவ்லி படத்தில் நடிக்கிறார்.







