கோயில் வாசல்வரை மோகன்லால் காரை அனுமதிப்பதா? ஊழியர்கள் சஸ்பெண்ட்

குருவாயூர் கோயில் வாசல்வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த கோயில் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக,…

குருவாயூர் கோயில் வாசல்வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த கோயில் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, குரு வாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள்  வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்க ளுக்கு முன் வந்தார்.

அப்போது, அவர் காரை கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனுமதித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத் தியது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த 3 ஊழியர்களை, கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.