முக்கியச் செய்திகள் சினிமா

அமேசான் பிரைமில் வெளியாகிறது மோகன்லாலின் பிரமாண்ட படம்!

மோகன்லாலின் மெகா பட்ஜெட் படமான ’மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’, ஓடிடி-யில் வெளியாவது உறுதியாகி இருப்பதாக மலையாள சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில், மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம், ’மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. தமிழில், இந்தப் படத்துக்கு ’மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுவதாக அறிவித்திருந் தார்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவரான குஞ்சாலி மரைக்காயரின் வரலாறாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குஞ்சாலி மரைக்கார், கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகப் போராடியவர். இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், பிரபு, சுகாசினி, சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அப்போதுதான் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு தொடர்ந்து நான்கு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இந்நிலையில், கேரளாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால், மரைக்கார் படத்தை ஓடிடி-யில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தெரிவித்திருந்தார். ‘படம் முடிந்து சில வருடங்களாகிவிட்டன. இதன் ரிலீஸ் தாமதமாகிவிட்டது. இன்னும் தாமதிக்க முடியாது என்பதால் அமேசான் பிரைமுடன் பேசி வருகிறோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமேசான் பிரைமுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் ரூ.90 கோடியில் இருந்து ரூ.100 கோடிக்கு இந்தப்படம் விலை பேசப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ரயில்வே தடுப்பு வேலியை லாவகமாக தாண்டும் யானை

Halley karthi

மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

Ezhilarasan

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Nandhakumar