ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறாரா முகமது ஷமி?

ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது.  இந்த…

ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது.  இந்த தொடரில் சென்னை,  கொல்கத்தா,  டெல்லி,  மும்பை, ஹைதராபாத்,  குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.  ஐபிஎல் தொடருக்காக கிரிக்கெட் வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.  விபத்து காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக விளையாடாமல் இருக்கும் டெல்லி கேபிட்டல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த முறை ஐபிஎல் தொடரில் களம் இறங்க உள்ளார்.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரரும்,  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான முகமது ஷமி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இருப்பினும் அவர் ஊசி எடுத்துக் கொண்டு விளையாடினார்.  ஆனால் தற்போதைய சூழலில் அவர் கட்டாயம் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும்,  இதனால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.