செங்கம் அருகே மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள்
பூக்குழியில் இறங்கி வழிபாடு செய்தனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் மொகரம் பண்டிகையும் ஒன்று. கற்பாலா போரில் முகமது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை
மொஹரம் பண்டிகையாக கடைபிடித்து வருகின்றனர். மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் மற்றும்
மேல்புழுதியூர் பகுதிகளில் அதிக அளவு இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களாக விரதம் இருந்த இஸ்லாமிய பெருமக்கள், அதிகாலையில் அக்னிகுண்டம் அமைத்து அதில் இறங்கினர். இதனையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான இந்துக்களும் பங்கேற்றனர்.







