சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கொச்சையான தகவல்களை பரப்பிய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார்.
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் ஆன்லைன் மூலமாக
ராணிப்பேட்டையை சேர்ந்த பாஜக பிரமுகர் மீது சமூக வலைதளத்தில் தன்னுடைய
புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கொச்சையாக பயன்படுத்தி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து காயத்ரி ரகுராமிடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், சமூக வலைதளத்தில்
என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி மாஃபிங் செய்து கொச்சையாக வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் பாபு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.பாஜகவில் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிதான் நான் வெளியே வந்தேன். மேலும் அந்த கட்சியில் இருக்க கூடிய பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த மூன்று மாத காலமாக என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அண்ணாமலையின் வார் ரூம் இல்லாதது பொல்லாததையும் கூறி வந்தார்கள். ஆடியோ வீடியோ வெளியானது. வார் ரூம் என்பது ஒவ்வொருத்தருக்காக ஒரு தனி ஐடி விங்கை வைத்துக் கொண்டு, அதில் நான்கு பேரை வைத்துக் கொண்டு, பல ஃபேக் ஐடிகளை உருவாக்கி, அவர்களை எதிர்ப்பவர்களை பற்றி கொச்சையான தகவலை பரப்புவது தான் வார் ரூம்களின் வேலை என குறிப்பிட்டார்.
என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் இவ்வளவு கொச்சையாக பதிவிட பதிவிடுகிறார்கள் என்றால் அவர்கள் யாருடைய சப்போர்டும் இல்லாமல் இதுபோன்று துணிவான செயலில் ஈடுபட முடியாது என குறிப்பிட்டார். அண்ணாமலையின் வார் ரூம் தான் இதுபோன்று என்னைப் பற்றியும் என்னுடைய புகைப்படத்தை மாப்பிங் செய்தும் கொச்சையான பதிவுகளை இட்டு பரப்பி வருவதாக தெரிவித்தார்.அண்ணாமலையின் புகைப்படத்தை தங்களுடைய டிபியாக வைத்துக் கொண்டு இதுபோன்ற கொச்சையான தகவல்களை அவருடைய வார் ரூம்கள் பரப்பி வருவதாக தெரிவித்தார். அண்ணாமலையின் வார் ரூம் அடையாறில் உள்ளது. இதேபோன்று பெங்களூரிலும் உள்ளது. அமெரிக்காவிலும் உள்ளதாக தெரிவித்தார்.
நான் தனிப்பட்ட நபர் பலவீனமாக இருப்பவர் என்ற நம்பிக்கையில் என்னை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என குறிப்பிட்டார். உயிரே போனாலும் பரவாயில்லை நான் பயப்படவில்லை. தமிழக பாஜகவில் பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாலியல்
அச்சுறுத்தலும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.