முக்கியச் செய்திகள் மழை இந்தியா செய்திகள்

“வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஆசீர்வாதம்”- பிரதமர் மோடி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அடைந்த அமோக வெற்றி வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஆசீர்வாதம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

குஜராத் தேர்தல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக 7வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்தேதிர மோடி, இந்த உன்னதமான வெற்றியை அளித்த குஜராத் மக்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த வெற்றி வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, இது தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதாகக் கூறினார். குஜராத் மக்கள் சக்திக்கு முன் தான் தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக கார்யகர்த்தர்கள் அனைவரும் சாம்பியன்கள் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர்களின் கடின உழைப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்த பிரதமர் மோடி, அந்த காரியகர்த்தர்கள்தான் கட்சியின் உண்மையான பலம் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும்

Arivazhagan Chinnasamy

புதுச்சேரியில் இன்று 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா; நெருக்கடியில் நாராயணசாமி அரசு!

Gayathri Venkatesan

அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி; முதலமைச்சர் நம்பிக்கை

G SaravanaKumar