மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்; வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவில் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல், கடந்த 6…

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலானது, சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவில் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “மாண்டஸ்” புயல், கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்மேற்கு வங்காள விரி குடாவில் மையம் கொண்டிருந்தது. இந்த புயலானது, தற்போது சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 480 கி.மீ தொலைவில் உள்ளது.

காரைக்காலின் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 390 கிமீ, மற்றும் தென்கிழக்கில் சுமார் 480 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று மாலை ஒரு அதி தீவிர புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவில், மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திரப் பிரதேச கடற்கரைகளைப் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்தைச் சுற்றிக் கடக்க வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 09 அதிகாலை வரை கடுமையான புயலின் தீவிரத்தைத் தக்க வைத்து, பின்னர் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.