ம.நீ.ம கட்சியிலிருந்து மகேந்திரன் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத்தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை…

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத்தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாக குழு கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்தல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், எம்.முருகானந்தம், மெளாரியா ஐபிஎஸ், தங்கவேல், உமாதேவி , சி.கே. குமரவேல். சேகர், சுரேஷ் அய்யர், ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் தனது ராஜினாமா கடிதைக் கொடுத்ததாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் , கமல்ஹாசனின் செயல்பாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும் மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும் சிறப்பாகவும், அறத்துடனும் செயல்படுவேன் எனவும் கட்சியிலிருந்து விலகுவது என்ற கடினமான முடிவை மிகக் கவனமாக எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

கமீலா நாசரைத் தொடர்ந்து ஆர். மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து ம.நீ.ம கட்சியிலிருந்து மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜ் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.