பீஸ்ட் படத்திற்கு தடை கோரும் ஜவாஹிருல்லா

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஆனால்,…

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஆனால், திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளனர். குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மமக தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன.முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் கட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது “பீஸ்ட்” என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட அவர், பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.