பாஜக முதலை கண்ணீர் வடிக்கிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பழங்குடியினப் பிரதிநிதியை குடியரசுத் தலைவர்  வேட்பாளராக அறிவித்து பாஜக முதலை கண்ணீர் வடிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவிற்கு…

பழங்குடியினப் பிரதிநிதியை குடியரசுத் தலைவர்  வேட்பாளராக அறிவித்து பாஜக முதலை கண்ணீர் வடிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவாக விண்ணப்பப் படிவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கையெழுத்திட்டார். பின்னர், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக மதச்சார்பை கடைபிடிப்பதால் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது. ஆளுநர் அலுவலகம் ஆர்எஸ்எஸ்-ஆல் கைப்பற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

யஷ்வந்த் சின்காதான் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர். இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை காக்கப்படவுள்ளது. பழங்குடியினப் பிரதிநிதியை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்து முதலை கண்ணீர் வடிக்கிறது. நாட்டு மக்கள் ஏமாறத் தயாரில்லை என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.