மருத்துவர் சாந்தாவின் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய தலைவராக இருந்த டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவால் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். சாந்தாவின் உடலுக்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவ மைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சாந்தாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது சகோதரி சுசிலா, மருத்துவ மைய இயக்குநர் செல்வலட்சுமி ஆகியோருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்







