அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை!

அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது என எம்.ஜி.எம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முழுமையாக…

அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது என எம்.ஜி.எம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முழுமையாக குணமடைந்தார். இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய எம்.ஜி.எம் மருத்துவர் பாலகிருஷ்ணன், கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னை எம்.ஜிம்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 54 வயதான ஜார்க்கண்ட் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் தொற்று, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதய ரத்த குழாய் நோய் இருந்தன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேறமும் ஏற்படாத காரணத்தால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிவு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 10 தேதி ஜார்கண்ட் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ-க்கு வெற்றிகரமாக இரண்டு நுரையீரல்களையும் மாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது சவாலானது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது ஜார்க்கண்ட் அமைச்ச ஜகர்நாத் மஹ்தோ முழுமையாக குணமடைந்து வீடு திருமபவுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளது என எம்.ஜி.எம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் எக்மோ கருவி எம்.ஜி.எம் மருத்துவமனையில் உள்ளதால் அமைச்சர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவமனை இயக்குனர் பிரசாந்த் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply