ஆம்பூரில், மே 13, 14, 15 ஆகிய நாட்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்படு செய்துள்ளது. இதில், மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆம்பூரில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன. இக்கடைகளில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி என பல வகை சுவையான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரியாணி என்றால் நினைவுக்கு வரும் ஆம்பூரில் 3 நாட்களுக்கு பிரியாணி திருவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்படு செய்துள்ளது.
ஆனால், இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியானது. இது, பிரியாணி பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, பிரியாணி பிரியர்கள், பிரியாணி கடை உரிமையாளர்கள், பல்வேறு அமைப்புகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?’
இந்நிலையில், பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெறச் செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை செயலாளர் ஓம்பிரகாஷ், கோட்டாட்சியர் காயத்ரியிடம் மனு அளித்துள்ளார். ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் பிரியாணி திருவிழா நடைபெறும் இடத்திற்கு எதிரில் மாட்டிறைச்சி பிரியாணி வினியோகம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: