தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திப்பவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற பெயரில் நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். கொல்லிமலையில் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடிய அவர், அந்த பகுதியில் செல்போன் டவர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக செய்துத் தரப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து அலங்காநத்தம் பிரிவு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக விமர்சனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ரத்து செய்யப்பட்ட டெண்டரை கூட, ஊழல் பட்டியலில் திமுக தலைவர் ஸ்டாலின் சேர்த்துள்ளதாகவும், என்ன நடக்கிறது என்றே எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.
பின்னர் தொட்டியம் – முசிறி சாலையில் வாழை தோட்டத்தை பார்வையிட்ட முதலமைச்சர், முசிறியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.