கேரள மக்களை துயரங்களைப்போக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 46 பேருக்கு மேற்பட்டவர்கள் உயிழிந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த இக்காட்டான காலத்தில் கேரள மக்களுக்கு துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதுள்ளார்.
அக்கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், முல்லை பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இக்கட்டான காலக்கட்டத்தில் நாங்கள் துணை நிற்போம், மக்களின் துயரங்களைப் போக்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்” என்ற உறுதியினை கேரள முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். ’
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, நீர்மட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், தமிழ்நாடு அதிகாரிகள் குழு கேரள குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்’ எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.







