பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு..!

பிசிசிஐ-ன் புதிய தலைவராக முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்படுள்ளார்.

பிசிசிஐ-ன் தலைவராக செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி கடந்த மாதம், தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து  புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்  பணியில் பிசிசிஐ ஈடுபட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ-ன்  வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ-ன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 45 வயதான மிதுன் மன்ஹாஸ் பிசிசிஐ-ன் 37 அவது தலைவராகியுள்ளார்.

ஆல்ரவுண்டர் வீரரான, மிதுன் மன்ஹாஸ் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. ஆனால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 157 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர் 27 சதம், 49 அரைசதம் உள்பட 9,714 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் 130 போட்டிகளில் விளையாடி 5 சதம் உள்பட 4,126 ரன்களும் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே, டெல்லி அணிகளுக்காக ஆடியுள்ள மிதுன் மன்ஹாஸ், பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளின் பேட்டிங் ஆலோசகராவும் பணியாற்றி இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.