மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி – பட்டம் வென்றார் ராஜேந்திரன்!

திருச்சியில் நடைபெற்ற மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டியில் , திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், ஜிம் உரிமையாளர்கள் சங்கம் மற்றும்…

திருச்சியில் நடைபெற்ற மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டியில் , திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்,
ஜிம் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மிஸ்டர் தோர் பிட்னஸ் ஸ்டியோ சார்பில்
மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி நேற்று மாலை நகராட்சி நாளங்காடி வளாகத்தில் நடத்தப்பட்டது.  இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 30 உடற்பயிற்சி மையங்களிலிருந்து 110 உடற்கட்டமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  ஆணழகன் போட்டியில் 55, 60, 65, 70, 75, 80 மற்றும் 80 கிலோ மற்றும் கூடுதல் எடை கொண்டவர்கள் என ஏழு பிரிவின் கீழ் போட்டி நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து சீனியர்களுக்கான பிட்னஸ் போட்டியும்
நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது  உடல் கட்டமைப்புகளை முன்னிலை படுத்தினர்.  போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை வென்று ஆணழகன் பட்டத்தை பெற்றார்.  அவருக்கு கோப்பை,  ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

2-ஆம் இடத்தை பெற்ற அப்துல்ரஹீம் ரூ.10 ஆயிரம் ரொக்கம்,  கோப்பை, 3-ஆம் இடம் பெற்ற வசந்தகுமார் ரூ.5 ஆயிரம் ரொக்கம்,  கோப்பை பரிசுகளாக பெற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை மிஸ்டர் தோர் பிட்னஸ் ஸ்டியோ நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.