விராட்கோலியை மிஸ் செய்கிறேன் – அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படம்

விராட்கோலியுடன் இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 நாளை மறுநாள் தொடங்குகிறது.…

விராட்கோலியுடன் இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 நாளை மறுநாள் தொடங்குகிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் தொடங்கும் இந்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் இடம் பெற்றுள்ளனர். மேலும் அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட பட்டியலை அண்மையில் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்த அணியில் விராட்கோலியும் விளையாடுகிறார்.

 

இரண்டாவது டி-20 நாக்பூரில் 23-ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹைதராபாத்தில் 25-ம் தேதியும் தொடங்குகிறது. இதனால் இந்திய அணியின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விராட்கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அனுஷ்கா சர்மாவின் சகோதரர் கர்ணேஷ் ஷர்மா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸுடன் இணைந்து ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்தைத் தயாரிக்கிறார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இது உருவாகிறது. இந்த படத்தில் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.

 

படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விராட்கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், உலகம் பிரகாசமாகவும், உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக மிக அழகாக தெரிகிறது இந்த நபருடன் இருக்கும்போது என பதிவிட்டுள்ளார்.

விராட்கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு குழந்தை பிறந்ததில் இருந்து அவர் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார். இந்நிலையில், சக்தா எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அனுஷ்கா சர்மா மீண்டும் திரைபயணத்தில் கால் எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.