மத்தியப் பிரதேசத்தில் 2021ஆம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு 55 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி காணமல் போகிறார்கள் என்று ஆய்வு அறிக்கை வெளியிடப்படுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 18வயதிற்குட்பட்ட 54,962 சிறுமிகள் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9,407 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 8,478 சிறுமிகள் காணமல் போயுள்ளனர். இந்த பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 4,914 சிறுமிகள் 2021ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டு காணாமல் போன சிறுமிகள் எண்ணிக்கை 7,230 ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கையானது 2021ம் ஆண்டில் 30% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
என்ஆர்சிபி அறிக்கையின் படி, மத்திய பிரதேசத்தில் 2021 ஆம் ஆண்டில் 10,204 (78%) பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு வரை காணாமல் போன மைனர் பெண்களில் 4,655 பேர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், அதே ஆண்டு 7,230 மைனர் பெண்கள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தமாக 11,885 பேரில் 8,258 பேர், அந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.







