சென்னையில், வாடகை செலுத்தாததால் செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற வீட்டின் உரிமையாளர்கள் மீது அந்நிறுவனம் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைதொடர்பு நிறுவனங்கள் செல்போன் கோபுரம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு புதிய கனெக்ஷன் கொடுத்து வருகின்றன. முன்பு வயல்வெளிகள், வீட்டின் மொட்டை மாடி போன்ற இடங்களில் செல்போன் கோபுரம் அமைக்கப்படும். அதன்படி பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனம் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் கோபுரம் அமைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோயம்போடு வடக்கு மாட தெருவில் உள்ள கட்டடிம் ஒன்றின் உரிமையாளர்களான சந்திரன், கருணாகரன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்து ஏர்செல் நிறுவனம் 15 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைத்தது. கடந்த 2006ம் அமைக்கப்பட்ட இந்த செல்போன் கோபுரத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு வரை வாடகை செலுத்தி வந்துள்ளனர்.ஏர்செல் நிறுவனம் மார்ச் 12, 2018 முதல் கார்ப்பரேட் இன்சல்வென்சி ரெசல்யூஷன் செயல்முறையின் கீழ் உள்ளது.சமீபத்தில், ஜிடிஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் சில ஊழியர்கள் கட்டிடத்திற்குச் சென்று பார்த்தபோது, கோபுரம் காணாமல் போனதைக் கண்டறிந்தனர். கோபுரம் காணாமல் போனது குறித்து கட்டட உரிமையாளர்களிடம் விசாரித்தனர். அப்போது கோயம்பேடு பகுதியில் உள்ள ஸ்கிராப் வியாபாரிக்கு கோபுரம் பிரித்து விற்பனை செய்யப்பட்டதாக மூவரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.