9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு…

வந்தவாசி அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஏழுமலை- சின்னபாப்பா தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு…

வந்தவாசி அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஏழுமலை- சின்னபாப்பா தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மகள் பிரியா 6 வயதில் திடீரென காணாமல் போயுள்ளார். அவரை மீட்ட பெண் ஒருவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.

அந்த காப்பகம் உரிமம் இன்றி இயங்கியதால் குழந்தைகள் நலக்குழுவினர் பிரியாவை மீட்டு வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு வளர்ந்த அவர் 10 ம் வகுப்பு வரை படித்தார். இந்த நிலையில், சோளிங்கர் காப்பகத்தை நடத்தி வந்த கார்த்தி, பிரியா தனது மகள் என உரிமை கொண்டாடியுள்ளார்.

இதையடுத்து பிரியா, பெற்றோர் என குறிப்பிட்ட ஏழுமலை, சின்னபாப்பா தம்பதிக்கு நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2021 ம் ஆண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. அதன்முடிவில் பிரியாவின் தந்தை ஏழுமலை என்று தெரிய வந்தது. இந்த நிலையில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் பிரியா அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.