29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் தமிழகம்

வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள்

அமைச்சர்கள் சிலரை, மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரக்காலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.​​

சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் இ.பெரியசாமியும், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவையும்,

தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ​திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ​மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Saravana Kumar

தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்: விஜய பிரபாகரன் கேள்வி!

Ezhilarasan

ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் – நடிகர் ரஜினி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Jeba Arul Robinson