ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக தேர்வாகியுள்ள செல்வபிரபுவுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான திருமாறன் என்பவரின் மகன் செல்வபிரபு. இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் தற்போது கியூபாவை சேர்ந்த யோண்ட்ரிஸ் என்பவரது பயிற்சியின் கீழ், பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்தார். 16 ஆண்டுகளுக்கு முன்னர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீர்ந்தர் சிங் என்ற தடகள வீரர் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள பிரிவில் சாதனை செய்தமைக்காக, 2023ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜீலை 10-ம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் செல்வபிரபுவுக்கு விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செல்வபிரபுவிற்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டூவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்
ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். #AsianAthleticsAssociation-ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். #AsianAthleticsAssociation-ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள்.… pic.twitter.com/ZOyu1Mdrmx
— Udhay (@Udhaystalin) July 5, 2023







