விக்ராந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி!

இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில், விக்ராந்த் மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையில் அமைச்சர் S.P.வேலுமணி கலந்துகொண்டு, படப்பிடிப்பை துவக்கி வைத்தார். வில் அம்பு என்னும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர்…

இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில், விக்ராந்த் மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையில் அமைச்சர் S.P.வேலுமணி கலந்துகொண்டு, படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

வில் அம்பு என்னும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் தற்போது, விக்ராந்த் மற்றும் யோகிபாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார். பிக் பேங் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இனிகோ பிராபகர், மிப்புசாமி, குமார் நடராஜன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி கலந்துகொண்டார். மேலும், கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் தாய் சரவணன், தயாரிப்பாளர் நந்தகுமார் போன்ற திரைப்பிரபலங்களும் இப்பூஜையில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஏ.வி.எம் அரங்கில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான திரைக்கதை மூலம் ரமேஷ் சுப்ரமணியம், இந்த திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.