பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17-ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 8 தனிப்படை அமைத்து 9-வது நாளாக தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக, கடந்த 23-ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பண பரிவர்த்தனை மூலம் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







