கடந்த ஆட்சியின் நில மோசடி குறித்து விசாரிக்க கமிட்டி: அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பதிவு செய்ததில் நடந்த மோசடி குறித்து, விசாரிக்க விசாரணை கமிட்டி அமைக்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம்…

அதிமுக ஆட்சியில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பதிவு செய்ததில் நடந்த மோசடி குறித்து, விசாரிக்க விசாரணை கமிட்டி அமைக்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் கீரைகள் வழங்கும் நிகழ்ச்சியை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “PACL என்ற தனியார் நிறுவனம் குறைந்த விலைக்கு வீட்டு மனை வழங்குவதாக கூறி இந்தியா முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மோசடியாக பதிவு செய்துள்ளது குறித்து லோக்தா கமிட்டி கண்டறிந் துள்ளது. இதுகுறித்து விசாரித்த சிபிஐ, மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை, விற்கக் கூடாது என உத்தரவிட்டு இருந்தது.

அதனையும் மீறி தமிழகத்தில் சில இடங்களில் நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சுமார் 3000 ஏக்கர் நிலங்கள் பதிவு செய்ததில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து முழுமையாக கண்டறிய விசராணை குழு அமைப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெற உள்ளோம். விசாரணையில், கடந்த ஆட்சியில் எந்த அரசியல்வாதிகள், எந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது என்ற விவரம் தெரிய வரும்.

இதே போல வணிக வரித்துறையிலும் சில மோசடிகள் நடைபெற்றுள்ளன. அது தொடர்பாக கண்டறிந்து விசாரணை நடத்தி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.