சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
19-ஆம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழா வரும் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்,53 நாடுகளைச் சேர்ந்த 121 திரைப் படங்கள் திரையிடப்பட உள்ளன. சர்வதேச திரைப்பட விழாவில் ,தமிழ் உட்பட 7 இந்திய மொழி திரைப்படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பொதுமக்களுக்கான நுழைவுக் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு 500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் இந்தத் திரைப்பட விழாவை பி.வி.ஆர் இணைந்து வழங்குகிறது. இந்த பட விழாவில், ஐந்து உணர்வுகள், பூமிகா, கர்ணன், கட்டில், கயமை கடக்க, மாறா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், உடன்பிறப்பே உட்பட 11 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

அண்ணாசாலை அருகில் உள்ள பி.வி.ஆர். மல்டி ஃபிளக்ஸில் (பழைய சத்யம் சினிமாஸ்) 4 திரையரங்குகள் (சத்யம், சீசன்ஸ், செரீன், சிக்ஸ் டிகிரீஸ்), அண்ணா திரையரங்கம் ஆகிய ஐந்து திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.
‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ பொதுச்செயலாளரும், விழாக்குழு இயக்கு நருமான இ.தங்கராஜ் இத்தகவலை தெரிவித்தார். சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.