முக்கியச் செய்திகள் தமிழகம்

“கலைஞர் நினைவு நூலகம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்”

மதுரையில் ஏழு தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட ஆறு இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் நினைவு நூலகம் ஏழு தளங்கள் கொண்டதாகவும், மாணவர்கள் நூல்களை தனித்தனியே படிக்க வசதியாக 24 பகுதிகளாக நூலகம் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார். இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் அமையவுள்ள நூலகம் ஒரு ஆண்டுக்கும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்க்கு திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!

Vandhana

சொந்த தொகுதியில் வாக்களித்த அமைச்சர்கள்!

Halley karthi

காவிய மெட்டுக்களை தந்த மெல்லிசை மன்னர்

Jeba Arul Robinson