காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : அமைச்சர் துரைமுருகன் உறுதி!

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்ற‌து.  இதில் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப்…

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்ற‌து.  இதில் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், கேரள மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்வளத் துறை அதிகாரிகளும் இணைய வழியாக பங்கேற்றனர்.

அப்போது உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நீரை திறந்துவிடவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரில் 37.9 டிஎம்சி இன்னும் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள இந்த நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும்.என நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தினார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும். ஆக.9-ம் தேதி வரை நிலுவையில் உள்ள நீரையும் திறந்துவிட வேண்டும். என ஆணைய காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

கர்நாடகாவிடம் 82% தண்ணீர் உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சரியாக செயல்படவில்லை, அதன் செயல்பாடு திருப்தியாக இல்லை என தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என எண்ணுகிறீர்களா என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? எனவும், வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது எனவும் துரைமுருகன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.