திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பால் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது. பால் கொள்முதல் செய்து வாகனங்களில் பால் கேன்களை ஏற்றி ஆவின் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோல் பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகத்திலும் எந்த தடங்கலும் இல்லை.

—கா.ரூபி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.