திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் அமைந்த்துள்ளது. இந்த கோயிலில் 60 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவானது வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முனீஸ்வரர் ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை முன்னே செல்ல முக்கிய வீதிகளில் வழியே வலம் வந்து அங்காள ஈஸ்வரி கோயிலை அடைந்தது. இதையடுத்து
அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவில் ஆலய தலைவர் புண்ணிய சேகரன் மற்றும் அறங்காவல் குழு தலைவர் மீவே.கருணாகரன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.







