“மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “ நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த புனித நாளை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மிலாடி நபி திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். “எல்லா மதமும் சம்மதம்’ என்ற கொள்கையை வலியுறுத்திய தலைவர் கேப்டன் அவர்களின் வழியில், நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து, நபிகள் நாயகம் அவர்களின் நெறிகளைப் பின்பற்றி, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவோம். இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கிறார்” என்றார் நபிகள் நாயகம். இந்த புனித நாளில் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தேமுதிக சார்பாக மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஓணம் பண்டிகை. இந்நாளில் ஒற்றுமையையும், செழிப்பையும், கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் அனைத்து கேரள மக்களுக்கும் தேமுதிக சார்பாக ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.