“நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்” – அபிஜித் தீப்கே

நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவிடம் நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அபிஜித், மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கெஜிரிவால் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது, மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பணியாற்றினார். பினராயி விஜயன் கேரளாவின் சுகாதார மேம்பாட்டிற்காகவும், அரவிந்த் கெஜிரிவால் டெல்லியின் கல்வி மேம்பாட்டிற்காகவும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அபிஜித்தின் கருத்துக்கு பாஜக முன்னாள் நிர்வாகி பூனாவாளா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நாட்டின் சிறந்த முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கேஜரிவால். பின்னர் மக்கள் அவர்களை நிராகரித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.