சென்னையில் தக்காளி விலை ரூ.30 அதிகரித்து இன்று கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பூர்த்தி செய்தி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு கிலோ சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் கிலோ ரூ.110க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. அதாவது நிவீன் தக்காளி கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 1,200 டன் தேவையுள்ள நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்ததால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.







