7.5% உள் ஒதுக்கீடு; அரசு பள்ளி மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் கலந்தாய்வு தொடங்கியது….

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள்ள ஒதுக்கீடுக்கு இன்று நேரடி கலந்தாய்வு தொடங்கியது. …

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள்ள ஒதுக்கீடுக்கு இன்று நேரடி கலந்தாய்வு தொடங்கியது. 

தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சுகாதாரத் துறையின் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் நேற்று முன்தினம் தொடங்கியது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர்.

வரும் 31-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். ஆக.1, 2-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆக.3-ம் தேதி இடம் ஒதுக்கப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஆக.4-ம் தேதி முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை
ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆக.8-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பது தொடர்பான வழிகாட்டுதல் வீடியோ, மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத
உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு  இன்று (ஜூலை 27) சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது.

7.5% உள்ஒதுக்கீட்டுக்குப் பிரிவில் 622 இடங்களுக்கு 1,300 மாணவர்கள் அழைப்பு விடப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவு, ராணுவ வீரர்கள் வாரிசுப் பிரிவு ஆகியவற்றுக்கு தலா 25 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 மாணவர்களுக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.