எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலத்திலிருந்த அதிமுக வேறு, தற்போது இருக்கும் அதிமுக வேறு என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் தனிநாடாக செயல்பட்டு வந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1948ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தவரும் 1974ஆம்
ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது தன்னுடைய அரண்மனையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அளித்தவருமான புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும் அவரின் நூற்றாண்டு விழா இன்று முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இன்று காலை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் சிலைக்கு கீழே உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னராக இருந்த வரும், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்த பெருமைக்குரியவரும், 99.99 ஏக்கர் பரப்பளவில் உள்ள அவருடைய அரண்மனையை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்காக ஒப்படைத்தவருமான ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று நேற்று தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம்
தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள
புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் இவருடைய அருங்காட்சியகம் வைக்கலாமா அல்லது
தனியாக வைக்கலாமா என்பதை ஆய்வுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். ஏனெனில்
ஏற்கனவே அரசு அருங்காட்சியகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது என்று கூறி வரும்
நிலையில் மன்னருக்கு தனியாக மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பாக இன்று அதிகாலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நீதித்துறையை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. பொதுக்குழுவில் பாதுகாப்பு வேண்டும் என்று அதிமுகவினர் காவல்துறையிடம் மனு அளித்த பின்னர் தான் காவல்துறை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு அளிக்கப்பட வில்லை என்றால் அதையும் ஒரு குற்றமாக கூறுவார்கள். அதிமுக பாதுகாப்பு கேட்டதின் பேரில் மட்டுமே காவல்துறை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.
நீங்கள் அதிமுகவில் பார்த்த எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் தற்போதுள்ள
அதிமுகவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு பதில்
அளித்த அவர் அப்ப உள்ள அதிமுக வேறு, தற்போது உள்ள அதிமுக வேறு இதற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது என்று கூறினார்.